0

பிட்காயின் (Bitcoin) ஒரு மெய்நிகர் (virtual) பணம். கண்ணால் பார்க்க முடியாத, கையால் தொட்டு உணர முடியாத பணம். 2009-ல் சந்தோஷி நகமோடோ என்ற புனை பெயரில் அடையாளம் தெரியாத ஒருவரால் பிட்காயின் உருவாக்கப்பட்டது. இதனை கணினியில் உள்ள அல்கோரிதம் (algorithm) வகை கணிதத்தை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். இந்த வழிமுறையில் பிட்காயின் உருவாக்குவதை மைனிங் (mining) என்று குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு கூடுதல் பிட்காயின் உருவாக்கும் போதும், இந்த கணக்கு முறை சிக்கலாகிக் கொண்டே போகும். இவ்வாறு தொடர்ந்து பிட்காயின் உருவாக்க முடியாது, அதிக பட்சமாக 21 மில்லியன் பிட்காயின்தான் உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது.


பிட்காயின் வைத்திருப்போர் அதற்கென ஒரு மெய்நிகர் பணப்பையையும் உருவாக்கி அதில் பிட்காயினை வைத்திருப்பர். இந்த மெய்நிகர் பணப்பைக்கு நமது ஈமெயில்போல ஒரு முகவரியும் கடவுச்சொல்லும் (password) உண்டு. இதில் பிட்காயின் போட ஒரு வழி, எடுக்க ஒரு வழி உண்டு. நான் உங்களிடமிருந்து ஒரு பொருளை வாங்கி அதற்கான பிட்காயினை உங்களுக்கான கடவுச்சொல்லை பயன்படுத்தி என்னுடைய மெய்நிகர் பணப்பையிலிருந்து உங்கள் மெய்நிகர் பணப்பைக்கு மாற்றி விடுவேன். என்னுடைய மெய்நிகர் பணப்பையிலிருந்து பிட்காயினை எடுக்கும் வழிக்கான கடவுச்சொல் யாருக்கும் தெரியாத வரையில் என்னுடைய மெய்நிகர் பணப்பை பாதுகாப்பாக இருக்கும்.

ஒவ்வொரு நாட்டின் பணமும் அந்தந்த நாட்டின் மைய வங்கியால் உருவாக்கப்பட்டு அதன் மாற்று விகிதங்கள் ஓரளவுக்கு நிலை நிறுத்தப்படும். பணத்தின் பயன்பாடு தொடர்பான சட்டங்களும் உண்டு. ஆனால், எந்த நாட்டு மைய வங்கி யும் உருவாக்காத பிட்காயின், எந்த நாட்டு சட்டத்துக்கும் கட்டுப்படாமல் இருக்கிறது.


👉2009 இல் ஒரு பிட்காயின் அறிமுக விலையாக 0.10 டாலராக இருந்தது அதாவது நமது இந்தியன் ரூபாயின் மதிப்பு 6 ரூபாய். 

👉2013 இல் ஒரு பிட்காயின் 1000$ கடந்து அனைவரையும் மகிழ செய்தது.

👉2014 இல் ஒரு பிட்காயின் 1230$ கடந்து செண்டது. அதாவது நமது இந்தியன் ரூபாயின் மதிப்பு 81180 ரூபாய்.

👉2017 டிசம்பர் மாதம் ஒரு பிட்காயின் 20000$ அதாவது நமது இந்தியன் ரூபாயின் மதிப்பு 13 லட்சம் ரூபாய் ஆக இருந்தது.

👉தற்போதைய ( 21-07-2018 ) விலையின் படி ஒரு பிட்காயின் 7302$ அதாவது நமது இந்தியன் ரூபாயின் மதிப்பு 502043.49 ரூபாய் ஆகும்.

பிட்காயின் அக்கௌன்ட் ஓபன் செய்வது எப்படி இங்கு கிளிக் செய்யவும்.

👇👇👇👇👇👇👇

Update Soon Under Process 

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

 
Top